இந்திய நிறுவனங்களை ஊக்கம் அளிப்பதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றின் 2 ஆம் அலையினால் பாதிப்படைந்த நிதி நிலைமையினை முன்னேற்ற முடியும் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது எஸ்.அண்ட்.பி குளோபல் ரேட்டிங்ஸ், மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் மற்றும் ஃபிட்ச் குழுமத்தின் உள்ளூர் பிரிவுகளின் மதிப்பீடுகள் மற்றும் கடன் கண்ணோட்டங்களில் தரமிறக்கப்படுவதற்கான விகிதம், இந்த காலாண்டில் 1.2 ஆக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் மிக உயர்ந்த மட்டத்தில் காணப்படும் என ப்ளூம்பெர்க் தரவுகள் தெரிவிக்கின்றன.
“உள்ளூர் நிறுவனங்கள் முதல் அலைகளை விட தொற்றுநோயின் இரண்டாவது அலைகளின்போது குறைவான தரமிறக்கங்களை எதிர்கொள்கின்றன. ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் கடந்த இரண்டு காலாண்டுகளில் தங்கள் பணப்புழக்கத்தை உயர்த்தியுள்ளனர். அந்தவகையில் ஆதரவு வழங்கிய கொள்கை வகுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி” என மூடிஸின் உள்ளூர் பிரிவான ஐ.சி.ஆர்.ஏ லிமிடெட் நிறுவனத்தின் துணை தலைமை மதிப்பீட்டு அதிகாரி கே.ரவிச்சந்திரன், ப்ளூம்பெர்க்கு கூறியுள்ளார்.
இந்திய நிறுவனங்களின் கடன் தரத்தில் புதிய மீட்சியானது, தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீள கட்டியெழுப்பப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பல முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என கூறப்படுகின்றது.