இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 39 ஆயிரத்து 96 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 99 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 89 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 846 பேர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 89 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 6 இலட்சத்து 70 ஆயிரம் பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.