அம்பாறை- கல்முனை நகரில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று (திங்கட்கிழமை) இரவு, மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில், சம்மாந்துறை, கல்முனை மற்றும் சாய்ந்தமருது போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.
எரிபொருள் விலையேற்றம், அரசி விலை, பசளை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் அரசுக்கு எதிராக இந்த மக்கள் கோஷங்களை எழுப்பி இருந்தனர்.
மேலும் ‘அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்’, ‘விலை ஏற்றி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே’ போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.