இந்தியாவில் இதுவரை ஏறக்குறைய 34 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 38 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18 வயது முதல் 44 வயதுவரையுடையோருக்கு இதுவரை 9 கோடியே 61 இலட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்தை எட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.