ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைவதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படாது என இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜெயசேகர தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்ற மறுநாளே பிரச்சினைகள் மறைந்துவிடாது என்றும் நாடு பாரிய போராட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு மக்களும் பங்களிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
ஏனென்றால் நாம் அனைவரும் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.