பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் (கோப்) இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகுமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை நாளை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.