ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நாளைய தினம் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு வழியேற்படுத்தும் வகையில் நேற்று பதவி விலகியிருந்தார்.
,தனையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.