பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50இலட்சத்தைக் கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் வைரஸ் தொற்றினால் 50இலட்சத்து 22ஆயிரத்து 893பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 336பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 32ஆயிரத்து 551பேர் பாதிக்கப்பட்டதோடு 35பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து இலட்சத்து 45ஆயிரத்து 693பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 417பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 43இலட்சத்து 48ஆயிரத்து 864பேர் பூரண குணமடைந்துள்ளனர்.