விருந்தோம்பல் துறை திறக்கப்பட்டதையடுத்து மே மாதத்தில் பிரித்தானிய பொருளாதாரம், 0.8 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.
இது தொடர்ச்சியாக நான்காவது மாத வளர்ச்சியைக் குறிக்கின்றது. ஆனால் இது ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததை விட மெதுவான வளர்ச்சி வீதமாகும்.
தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட பொருளாதாரம் இன்னும் 3.1 சதவீதம் குறைவாக உள்ளது என்று தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.
பப்கள், உணவகங்கள் மற்றும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து மே மாதம் முதல் மூன்று மாதங்களில், வலுவான சில்லறை விற்பனையால் பொருளாதார உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது.