நடிகர் தனுஷ் மற்றும் சாய்பல்லவி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் 5 மில்லியின் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
தென்னிந்திய அளவில் வெளியான பாடல்களில் 5 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் பாடல் என்ற பெருமையை இந்த பாடல் பெற்றுள்ளது.
அதேநேரம் இந்த பாடல் யூடியூபில் இதுவரை 118 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.