அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் வியாழக்கிழமை ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலுடன் ஒரு சந்திப்பை நடத்துவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
நேட்டோ நட்பு நாடுகளுக்கிடையேயான ஆழமான மற்றும் நீண்டகாலம் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களைத் தாக்கிய ரம்சம்வார் தாக்குதல் மற்றும் ரஷ்யா- ஜேர்மனிக்கு இடையிலான நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் இணைப்பு திட்டம் குறித்து இதன்போது பேச்சு நடைபெறவுள்ளது.
இரு நாடுகளுக்கிடையேயான உறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் குறித்த உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் வொஷிங்டனுக்கு ஜேர்மன் அதிபர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.