தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் நரேந்திர மோடியை இன்று (சனிக்கிழமை) சந்தித்து, கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால், சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் ஊடாக நேற்று இரவு, டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையிலேயே இன்று , பிரதமர் மோடியை அவர் சந்திக்க உள்ளார்.
குறித்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் கலந்துரையாடுவாறு என எதிர்பார்க்கப்படுகின்றது.