ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு பிறகு, அங்கு ஏற்பட்டுள்ள அதிகார மோதலினால் நிலவி வரும் போராட்டங்களையும், வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. அமைப்பு மற்றும் அமெரிக்காவிடம் அரசாங்கம் உதவி கோரியுள்ளது.
அரசியல் ரீதியிலான குழப்பம் மற்றும் மக்களிடையே ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை கட்டுப்படுத்த படைகளை அனுப்பும் படை இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக நாட்டின் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்த படைகளை அனுப்பி உதவும்படி ஐ.நா. மற்றும் அமெரிக்காவுக்கு நாட்டின் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்த படைகளை அனுப்பி உதவும்படி ஐ.நா. மற்றும் அமெரிக்காவுக்கு ஹெய்டி அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளது.
படைகளை அனுப்பும்படி ஹெய்டி அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையை நிராகரித்துள்ள அமெரிக்கா தற்போதைய சூழ்நிலையில் படைகளை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது.
ஆனால், ஜனாதிபதி கொலை தொடர்பாக விசாரணைக்கு எஃப்.பி.ஐ. (தேசிய புலனாய்வு அமைப்பு) மற்றும் உட்துறை அமைச்சகம் அதிகாரிகளை ஹெய்டிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
அதேபோல், ஐ.நா. அமைதிப்படையை ஹெய்டிக்கு அனுப்ப ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ள 15 நாடுகளில் சம்பதம் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.