மியன்மாரின் எல்லைக்கு அருகிலுள்ள சீன நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியை முடக்கி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ருயிலி நகரம் 2 ஆவது முறையாக முடக்கப்பட்டுள்ளதுடன், இங்கு 210,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
அண்டை நாடான மியன்மாரில் உள்ள மியூஸிலிருந்து ருயிலி ஒரு முக்கிய கடக்கும் இடம். இங்கு கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் இராணுவ ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையினால் அமைதியின்மை அதிகரித்துள்ளது.
ஆகவே வன்முறையிலிருந்து தப்பிக்க, மக்கள் எல்லையைத் தாண்டி சீனாவிற்குள்ளே வர முயற்சிப்பார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகளில் ஒருவர் மியன்மார் நாட்டவர் என்று யுன்னான் மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த மார்ச் மாதத்தில், சீனா பிரதான பாலத்தை மூடிவிட்டு மியன்மாரைக் கடந்தது.
இந்நிலையில் சட்டவிரோத எல்லைக் கடப்புகளைத் தடுக்க அதிகாரிகள் சமீபத்திய மாதங்களில், ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளனர்.
மேலும் ருய்லியிலுள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். மேலும் அறிவிப்பு வரும் வரை அனைத்து அத்தியாவசிய பயணங்களும் தடை செய்யப்படும் என்று உள்ளூர் அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு உறுப்பினர் மட்டுமே சோதனைக் காலத்தில் அனுமதியுடன் தினசரி தேவைகளுக்கு வெளியே செல்ல முடியும் எனவும் உள்ளூர் அரசு அறிவித்துள்ளது.
அத்துடன் அனைத்து குடியிருப்பாளர்களையும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.