ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் ஒரு இலட்சத்து 50ஆயிரத்து 705பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 60இலட்சத்து 30ஆயிரத்து 240பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 23ஆயிரத்து 704பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 783பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சத்து 74ஆயிரத்து 738பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 54இலட்சத்து நான்காயிரத்து 797பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.