பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 44ஆயிரத்து 104பேர் பாதிக்கப்பட்டதோடு 73பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 55இலட்சத்து 63ஆயிரத்து 006பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 896பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பத்து இலட்சத்து 14ஆயிரத்து 242பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 618பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 44இலட்சத்து 19ஆயிரத்து 868பேர் பூரண குணமடைந்துள்ளனர்.