ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 92ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் 92ஆயிரத்து 24பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 37இலட்சத்து 60ஆயிரத்து 270பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 864பேர் பாதிக்கப்பட்டதோடு 34பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 24ஆயிரத்து 946பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 356பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 36இலட்சத்து 43ஆயிரத்து 300பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.