சீன தனியார் பங்கு நிறுவனங்கள், நட்சத்திர பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கையகப்படுத்தும் ஏலங்களை அதிகரித்து வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனாவின் அபிலாஷைகள் மற்றும் இங்கிலாந்து நிறுவனங்களை கையகப்படுத்துதல் ஆகியவை தொடர்பிலேயே அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும் வீடியோ கேம்ஸ் டெவலப்பர் சுமோ குழுமத்தில் நிபுணத்துவ கூட்டு நிறுவனமான டென்சென்ட், கடந்த ஞாயிற்றுக்கிழமை, சுமார் 1 பில்லியன் டொலருக்கு அதிகமான தொகையை ஈட்டியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை பெய்ஜிங்கிற்கான இணைப்புகளைக் கொண்ட கொள்வனவு நிறுவனங்கள் அமைதியாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் நிறுவனங்களை குறிவைத்து வருகின்றன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சில நிறுவனங்கள், சீனாவுக்கான பிரதிநிதிகளாக திறம்பட செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் ஏனைய சிலர், நாட்டின் கம்யூனிஸ்ட் ஆட்சியுடனான தொடர்பை வரிவிதிப்புகள் ஊடாக மறைக்கிறார்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை மைக்ரோசிப்கள் போன்ற ஹைடெக் ‘இரட்டை- பயன்பாட்டு’ தொழில்நுட்பங்களில் பணிபுரியும் நிறுவனங்களில் அந்நிய முதலீடு குறித்தும் கவலைகள் உள்ளன. அவை தீங்கற்றதாகத் தோன்றினாலும் இராணுவமயமாக்கப்பட்டு எதிரிகளால் பிரிட்டனுக்கு எதிராகத் திரும்பக்கூடும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.