இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 40 ஆயிரத்து 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 13 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 5 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 4 இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று ஒரேநாளில் 542 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது.