நாட்டிற்கு மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, 90,000 பைசர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பைசர் தடுப்பூசிகள் ஆரம்பத்தில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை முதல் டோஸாகப் பெற்றவர்களுக்கு 2 ஆவது டோஸாக வழங்கப்பட்டது.
இருப்பினும் மேலும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் விரைவில் பெறப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.