மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது. இதன்காரணமாக மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மாநிலத்தில் பல பகுதிகளிலும் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் இருந்து 800 பேர்வரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராய்காட் மாநிலத்தின் பகுதிகளில் ஏராளமாக மரங்கள் சாய்ந்துள்ளதுடன், வீடுகள், சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.