உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக்கின் 2020ஆம் ஆண்டுக்கான அத்தியாயம், தற்போது டோக்கியோவில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
கடந்த 23ஆம் திகதி இத்தொடரில் தற்போது ஜிம்னாஸ்டிக், நீச்சல் என ஏராளமான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்றைய இறுதிநாள் முடிவு வரை பதக்க பட்டியலில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. சீனா ஆறு தங்க பதக்கங்கள், இரண்டு வெள்ளி பதக்கங்கள், ஐந்து வெண்கல பதக்கங்கள் என மொத்தமாக 13 பதக்கங்களை வென்றுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக ஜப்பான் ஆறு தங்க பதக்கங்கள், ஒரு வெள்ளி பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் என மொத்தமாக 8 பதக்கங்களை வென்றுள்ளது.
மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா ஐந்து தங்க பதக்கங்கள், மூன்று வெள்ளி பதக்கங்கள், நான்கு வெண்கல பதக்கங்கள் என மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது.