அரசாங்கம் உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால், அதனை எதிர்த்து இன்று (புதன்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 100 வைத்தியசாலைகளில் இன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும் அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தாதியர்கள் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.