இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 211 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 15 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 6 இலட்சத்திற்கும் அதிமான தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 4 இலட்சத்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 641 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 22 ஆயிரத்தை கடந்துள்ளது.