இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொரோனா தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன.
அதன்படி நேற்றைய தினம் 5 இலட்சத்து 15 ஆயிரத்து 830 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
அதன்படி, நேற்று மாத்திரம் 4 இலட்சத்து 18 ஆயிரத்து 494 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை 71 இலட்சத்து 88 ஆயிரத்து 692 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம், 56 ஆயிரத்து 738 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று செலுத்தப்பட்டது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 16 இலட்சத்து 63 ஆயிரத்து 421 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம், 2 ஆயிரத்து 168 பேருக்கு மொடெர்னா தடுப்பூசியும் நேற்று செலுத்தப்பட்டது.
இதற்கமைய, இதுவரையில் 7 இலட்சத்து 11 ஆயிரத்து 793 பேருக்கு மொடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் நேற்றைய தினம் 38 ஆயிரத்து 430 பேருக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, அந்த தடுப்பூசியினை செலுத்திக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது.