பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 58இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 58இலட்சத்து ஆயிரத்து 561பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 29ஆயிரத்து 515பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 31ஆயிரத்து 117பேர் பாதிக்கப்பட்டதோடு 85பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11இலட்சத்து 83ஆயிரத்து 153பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 853பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 44இலட்சத்து 88ஆயிரத்து 894பேர் பூரண குணமடைந்துள்ளனர்.