வடக்கு அயர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற, இன்றே கடைசி நாள் ஆகும்.
முன்னதாக வடக்கு அயர்லாந்தில் கொவிட் தடுப்பூசியின் முதல் அளவு செலுத்தும் பணிகள் ஜூலை 31ஆம் நிறைவடையும் என சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் கூறியிருந்தார்.
பெல்ஃபாஸ்டில் உள்ள எஸ்எஸ்இ அரங்கில் உள்ள மையங்கள் மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள மற்ற இடங்கள் கொவிட்-19 க்கு எதிரான பிரச்சாரத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளன.
இந்த நிலையில், இன்றுடன் (சனிக்கிழமை) முதல் டோஸை செலுத்தும் பணிகள் முடிவுக்கு வரவுள்ளன.
இதனிடையே முதல் டோஸை செலுத்துவதற்கான மையங்களை மூடுவது, ஊழியர்களை மீண்டும் சுகாதார சேவைக்கு மீண்டும் நியமிக்க அனுமதிக்கும் என சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தடுப்பூசி திட்டம் தொடரும் எனவும் ஆனால், முக்கியமான மாற்றங்கள் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.