அவுஸ்ரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம், இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது ஒகஸ்ட் ஒன்பதாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சிலருக்கு அதிகவேகமாகப் பரவும் டெல்டா வகை மாறுபாடு உறுதிசெய்யப்பட்டுள்ளதால், குயின்ஸ்லாந்து மாகாண அரசாங்கம் இந்த முடிவினை எடுத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பொலிஸ் கட்டளையின் கீழ், சுமார் 300 இராணுவ வீரர்கள், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வீடு வீடாகச் சென்று நேர்மறை சோதனை செய்தவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்தனர்.
நாடு 16 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 70 சதவீத பேருக்கு தடுப்பூசி போடும் போது முடக்கநிலை கட்டுப்பாடுகள் குறையும் என பிரதமர் ஸ்கொட் மோரிசன் உறுதியளித்துள்ளார். எனினும் தற்போது தடுப்பூசி வீதம் 19 சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 70 சதவீத மதிப்பை எட்டும் என்று மோரிசன் எதிர்பார்க்கிறார்.
இதனிடையே பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன், தனது மகன் படிக்கும் பாடசாலையில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.