தடுப்பூசி வழங்கலில் நிலவும் ஏற்றத்தாழ்வை சீராக்கும் வகையில், டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள் என வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
மாறுபாடு அடைந்துள்ள டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்களாக ஜேர்மனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மூன்றாவது டோஸ் செலுத்த தயாராகி வருகின்ற நிலையில், அவரின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேஸஸ் கூறுகையில், ‘உலக நாடுகள் தங்கள் மக்களின் உயிரைப் பாதுகாக்க காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், அதற்காக தடுப்பூசி மொத்த உற்பத்தியில் ஏற்கெனவே மிக அதிகமான டோஸ்களைப் பயன்படுத்திவிட்ட வளர்ந்த நாடுகள் இன்னும் அதிகமாக இதனைப் பயன்படுத்த நினைப்பது ஏற்புடையது அல்ல.
பெரும்பாலான தடுப்பூசி அதிக வருவாய் ஈட்டும் நாடுகளுக்குச் செல்வதை மாற்றியமைக்க வேண்டும். அதை மடைமாற்றி குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்’ என கூறினார்.