அர்ஜெண்டீனாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அர்ஜெண்டீனாவில் மொத்தமாக 50இலட்சத்து இரண்டாயிரத்து 951பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட எட்டாவது நாடாக விளங்கும் அர்ஜெண்டீனாவில் இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து ஏழாயிரத்து 213பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 13ஆயிரத்து 549பேர் பாதிக்கப்பட்டதோடு 190பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 50ஆயிரத்து 580பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 657பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 46இலட்சத்து 45ஆயிரத்து 158பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.