இஸ்ரேலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இஸ்ரேலில் ஒன்பது இலட்சத்து 482பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 34ஆவது நாடாக விளங்கும் இஸ்ரேலில் இதுவரை ஆறாயிரத்து 542பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 156பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 30ஆயிரத்து 357பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 366பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக எட்டு இலட்சத்து 63ஆயிரத்து 583பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.