லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, லாப்ஃஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாயினாலும் 5 கிலோ கொள்கலனின் விலை 145 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 12.5 கிலோ லாப்ஃஸ் எரிவாயு கொள்கலனின் விலை ஆயிரத்து 856 ரூபாயாகவும் 5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 743 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.