நாட்டின் பாதுகாப்பில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத் தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்ட நிலையில், இதன்போது உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ”காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆயுதப் படைகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
நாட்டின் பாதுகாப்பில் எந்தவொரு சவாலையும், எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார்நிலையில் உள்ளன.
முப்படைகளுக்கு இடையிலான கூட்டுத்தன்மையை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது அவர்களின் ஒட்டுமொத்த போர்த்திறனை மேம்படுத்தும்’ எனக் கூறியுள்ளார்.