ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தமாக 2,001பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 42ஆவது நாடாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழு இலட்சத்து ஆயிரத்து 776பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்ட 20ஆயிரத்து 15பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக ஆறு இலட்சத்து 79ஆயிரத்து 760பேர் முழுமையாக மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.