இங்கிலாந்தில் உள்ள 16 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் முதல் கொவிட் அளவு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்காக, எதிர்வரும் ஒகஸ்ட் 23ஆம் திகதிக்குள் முன்பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்திற்குள் இந்த வயதினருக்கு தடுப்பூசிகளை வழங்குவதால், அடுத்த மாதம் பாடசாலை அல்லது கல்லூரியைத் தொடங்குவதற்கு முன்பு இளைஞர்கள் சில பாதுகாப்புகளை உருவாக்க முடியும் என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
இவர்கள், தடுப்பூசி போடுவதற்கு, தகவல் அல்லது கடிதம் மூலம் அழைக்கப்படுவார்கள் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
வேல்ஸிலும் கடிதம்அனுப்பப்படுகின்றன, அதே நேரத்தில் வடக்கு அயர்லாந்தில், நடைபயிற்சி மையங்கள் இப்போது இளைஞர்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. ஸ்கொட்லாந்தில் அவர்கள் தங்கள் ஆர்வத்தை ஒன்லைனில் பதிவு செய்யலாம்.