இரண்டு கொவிட் தடுப்பூசி அளவுகளைக் கொண்ட இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ளவர்கள், கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த ஒருவருடன் தொடர்பு கொண்டால் இனி தனிமைப்படுத்த வேண்டியதில்லை.
10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதற்கு பதிலாக, அவர்கள் இப்போது பி.சி.ஆர். சோதனை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் இது கட்டாயமில்லை.
அதேநேரத்தில் மூடப்பட்ட இடங்களில் முகக்கவசத்தை பயன்படுத்தவும் மற்றவர்களுடன் குறிப்பாக மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்களுடனான தொடர்பைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வழிகாட்டுதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கும் பொருந்தும்.
சுய தனிமைப்படுத்தல் விதிகளுக்கான மாற்றங்கள் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் தளர்த்தப்பட்ட விதிகள், வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.