கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஹக்கோ19 என்ற தடுப்பூசியின் முதற்கட்ட பரிசோதனை வெற்றிபெற்றுள்ளதாக மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி பாதுகாப்பானது எனவும், பரிசோதனையில் பங்கேற்றவர்கள் நோய் எதிர்பாற்றலைக்கொண்டுள்ளதாகவும் டிசிஜிஐ அறிவித்துள்ளது.
உயிரி தொழிநுட்ப தொழிலக ஆய்வு உதவி கவுன்சிலுடன், ஜென்னோவா பயோ ஃபார்மசூட்டிகல்ஸ் என்ற தனியார் மருந்து நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள குறித்த தடுப்பூசியானது இந்திய பாராம்பரிய முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தூண்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஹெச்டிடி பயோ கார்ப்பரேஷன் நிறுவனம் உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட பரிசோதனை வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.