யாழ்ப்பாணத்தில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 6 பேரும் கொடிகாமத்தில் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவருக்கும் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் பதிவாகிய அதிக உயிரிழப்பு எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.