இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் மொத்தமாக 45இலட்சத்து இரண்டாயிரத்து 396பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் இத்தாலியில் இதுவரை ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 914பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 547பேர் பாதிக்கப்பட்டதோடு 59பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 35ஆயிரத்து 724பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 499பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 42இலட்சத்து 37ஆயிரத்து 758பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.