இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 251 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 27 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இவர்களில் 3 கோடியே 19 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 3 இலட்சத்து 77 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று ஒரேநாளில் 205 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது.