ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவ மூத்த அதிகாரி ஒருவர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற தற்போது ஆறு பயங்கரவாத குழுக்கள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த குழுக்கள் இந்தியப் படையினருக்கு சவால் விடுக்கும் வகையில் கடந்த ஒரு மாதமாக செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஜம்மு – காஷ்மீரில் நடக்கும் வன்முறைகளின் அளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் பாதுகாப்பு படையினர், அல்லது அரசியல் தலைவர்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.