அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக விளையாடிய ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.
இது டேனில் மெட்வேடவ்வின் முதல் கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டம் ஆகும்.
அத்துடன் கடந்த 2005மஆ; ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.