கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,289பேர் பாதிக்கப்பட்டதோடு 43பேர் உயிரிழந்துள்ளார்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 59ஆயிரத்து 410பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 305பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 42ஆயிரத்து 322பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 89ஆயிரத்து 783பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.