கர்ப்பத்தின் அனைத்து நிலைகளிலும் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என வேல்ஸின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஃப்ராங்க் அதெர்டன் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ஃப்ராங்க் அதெர்டன், கொவிட் காரணமாக கடுமையான நோயுடன் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறினார்.
ராயல் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி மற்றும் ரோயல் மருத்துவக் கல்லூரி ஆகியவை கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை பரிந்துரைக்கின்றன.
கர்ப்ப காலத்தில் கோவிட் பிடிப்பது மருத்துவமனையில் சேர்ப்பதில் குறிப்பிடத்தக்க அபாயத்தை கொண்டுள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்கள் மற்ற மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது கடுமையான நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ‘கொவிட்-19 தடுப்பூசி தாய்மார்களையும் குழந்தைகளையும் தவிர்க்கக்கூடிய பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.
கர்ப்பத்தின் அனைத்து நிலைகளிலும் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை அறிய இப்போது எங்களுக்கு உலகளாவிய அனுபவம் நிறைய உள்ளது. பெண்கள் காத்திருக்கக் கூடாது, கர்ப்பத்தை திட்டமிட்டாலும் சரி அல்லது ஏற்கனவே கர்ப்பமாக இருந்தாலும் சரி’ என கூறினார்.