ஆப்கானிஸ்தானில் உள்ள வங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே நடக்கிறது என்றும் பிற வங்கி சேவைகள் எதுவும் நிகழவில்லை எனவும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய வங்கியின் தலைமை செயல் அதிகாரி சையது மூசா கலீம் அல்-ஃபலாகி தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் இடையே நிலவும் அச்ச உணர்வு காரணமாக ஆப்கானிஸ்தானின் நீதித்துறையை இருப்புக்காக போராட வேண்டிய நெருக்கடியில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்துள்ளவர்கள் பெருமளவில் தற்போது பணத்தை திரும்ப எடுத்து வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் வங்கி கட்டமைப்பே கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளது’ என கூறினார்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தாலிபன்கள் கைப்பற்றிய ஒகஸ்ட் மாதத்திற்கு முன்பே அந்நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றது.