அரிசி வகைகளுக்கான அதிக பட்ச சில்லரை விலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மூன்று வகை அரிசிகளுக்கான விலையினை பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வௌியிட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே குறித்த சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நாட்டரிசி ஒரு கிலோ 115 ரூபாய்க்கும் சம்பா அரிசி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும் கீரி சம்பா ஒரு கிலோ 165 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.