கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 770 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 56 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 15 ஆயிரத்து 524 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 786 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.