இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்றின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 23 கோடி இந்தியர்கள் 2 டோஸ் தடுப்பூசிகள் மூலமாக கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 87 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்ற நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளவர்கள் அதிகரித்திருப்பது புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.