ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்கக் கோரி தலிபான்கள் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து இந்தியா பாதுகாப்பு காரணங்களுக்காக விமான சேவைகளை நிறுத்திவைத்துள்ளது.
அதேநேரம் அங்கு சிக்கித் தவித்த இந்திய மக்களை மீட்பதற்காக இராணுவ விமானங்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையில் தலிபான்கள் தற்போது சர்வதேச விமான சேவைகளை ஆரம்பித்துள்ள நிலையில், மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.