ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானிய உட்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் காரி சயீத் கோஸ்டி தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூலின் ஈட்கா மசூதியில் மக்களின் அதிக நடமாட்டம் இருந்த வேளையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.
தலிபான்கள் இரண்டு தசாப்த கால மோதலில் தங்கள் வெற்றியை கொண்டாடுவதற்காக நகரத்திற்கு வெளியே முதல் பெரிய கூட்டத்தை நடத்தியபோது ஈட்கா மசூதியின் நுழைவாயிலுக்கு வெளியே இந்த வெடிப்பு ஏற்பட்டது.
அங்கு தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபி{ஹல்லா முஜாஹித்தின் தாயார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என அறியமுடிகின்றது.
இருப்பினும், ஒகஸ்ட் நடுப்பகுதியில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதிலிருந்து, ஐஎஸ்.ஐஎல்-தொடர்புடைய தீவிரவாதிகள் அவர்கள் மீதான தாக்குதல்களை அதிகரித்தனர். அத்துடன் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இது இரு பிரிவுகளுக்கும் இடையே ஒரு பெரிய போரின் அபாயத்தை உயர்த்தியுள்ளது.